/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலில் விஷம் கலந்து கொடுத்து மகளுடன் தம்பதி தற்கொலை
/
பாலில் விஷம் கலந்து கொடுத்து மகளுடன் தம்பதி தற்கொலை
பாலில் விஷம் கலந்து கொடுத்து மகளுடன் தம்பதி தற்கொலை
பாலில் விஷம் கலந்து கொடுத்து மகளுடன் தம்பதி தற்கொலை
ADDED : செப் 25, 2024 01:29 AM

திருப்பூர்:திருப்பூர், அணைக்காடு, எம்.ஜி.ஆர்., நகர் அடுக்கு மாடி குடியிருப்பில், நாகசுரேஷ் என்பவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், கதவை உடைத்து திறந்தனர். வீட்டுக்குள், 6 வயது சிறுமி உட்பட, மூவரின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன.
திருப்பூர் வடக்கு போலீசார் கூறியதாவது:
சடலமாக கிடந்த மதுரையை சேர்ந்த நாகசுரேஷ், 44, என்பவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர்.
அவர்களை பிரிந்த இவருக்கு, கணவரை பிரிந்து வாழ்ந்த விஜயலட்சுமி, 42, என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், 13 ஆண்டுகளாக திருப்பூரில் சேர்ந்து வாழ்ந்தனர்.
இதில், இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. மூத்திஸ்வரி என்ற அந்த பெண் குழந்தை, ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
நாகசுரேஷ், தன் நண்பர் சூர்யமூர்த்தி என்பவருக்கு, 10 லட்சம் ரூபாய் கொடுத்தார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், 13ம் தேதி, கடன் பிரச்னை காரணமாக சூர்யமூர்த்தி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். நாகசுரேஷ், சூர்யமூர்த்தியின் மனைவியிடம் பணத்தை கேட்டார். அதற்கு, அவர் பணத்தை கொடுக்க முடியாது என மறுத்ததாக கூறப்படுகிறது.
மனமுடைந்த நாகசுரேஷ், பாலில் விஷம் கலந்து குழந்தையை கொன்ற பின், விஜயலட்சுமியுடன் சேர்ந்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
வீட்டில், போலீசார் சோதனை நடத்தி, நாகசுரேஷ் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், தாங்கள் அணிந்துள்ள நகையை விற்று, தங்களது இறுதி சடங்கை செய்யுமாறு அவர் எழுதி வைத்து இருந்தார்.