/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டூவீலர் மீது கார் மோதி தம்பதி பரிதாப பலி
/
டூவீலர் மீது கார் மோதி தம்பதி பரிதாப பலி
ADDED : ஏப் 01, 2025 06:43 AM
திருப்பூர்; அவிநாசி அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில், அதேயிடத்தில், தம்பதி பரிதாபமாக இறந்தனர்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, கணியூரை சேர்ந்தவர் முருகன், 51. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி அலமேலு, 46. நேற்று முன்தினம் இரவு இருவரும், டூவீலரில் அவிநாசி அருகே நல்லிகவுண்டன்பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தனர். அவ்வழியாக அதே திசையில் வந்த கார், டூவீலர் மீது மோதியதில், தம்பதியினர் துாக்கி வீசப்பட்டனர்.படுகாயமடைந்த இருவரும், அதேயிடத்தில் இறந்தனர். விபத்து குறித்து அறிந்து சென்ற திருமுருகன்பூண்டி போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய, கார் டிரைவர் ஆல்வின் பெடரியாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

