/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோர்ட் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
கோர்ட் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மே 14, 2025 11:33 PM

திருப்பூர், ; கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை உரிமையியல் கோர்ட் அலுவலக உதவியாளராக இருந்த நாகராஜன் இறந்தார்.
அவரது இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரை மனரீதியாக பாதிப்படைய செய்த நீதிபதியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட கோர்ட் வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் கோர்ட் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.