/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவரிங் நகை அடகு வைத்து மோசடி; நகை மதிப்பீட்டாளர் தற்கொலை முயற்சி
/
கவரிங் நகை அடகு வைத்து மோசடி; நகை மதிப்பீட்டாளர் தற்கொலை முயற்சி
கவரிங் நகை அடகு வைத்து மோசடி; நகை மதிப்பீட்டாளர் தற்கொலை முயற்சி
கவரிங் நகை அடகு வைத்து மோசடி; நகை மதிப்பீட்டாளர் தற்கொலை முயற்சி
ADDED : ஆக 10, 2025 11:13 PM
திருப்பூர்; திருப்பூரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில், 2017 முதல், சண்முகசுந்தரம் என்பவர், நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். வங்கி வாடிக்கையாளர்கள் சிலர் பெயரில், கவரிங் நகைகளை அடகு வைத்து, 54.26 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக, வங்கி அதிகாரி பரத்குமார், மாநகர போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வரும் நிலையில், வங்கி நிர்வாகம் இதுகுறித்து நகை மதிப்பீட்டாளர் சண்முகசுந்தரத்திடம் விசாரித்துள்ளது. விவகாரம் வெளியே தெரிந்ததால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்; அதில், இரண்டு கால்களும் துண்டான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்; போலீசார் விசாரிக்கின்றனர்.