sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மாடுகளுக்கு தாது உப்பு கலவை  வெப்பம் அதிகரிப்பால் தேவை 

/

 மாடுகளுக்கு தாது உப்பு கலவை  வெப்பம் அதிகரிப்பால் தேவை 

 மாடுகளுக்கு தாது உப்பு கலவை  வெப்பம் அதிகரிப்பால் தேவை 

 மாடுகளுக்கு தாது உப்பு கலவை  வெப்பம் அதிகரிப்பால் தேவை 


ADDED : பிப் 04, 2026 05:45 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: வெப்பம் அதிகரித்துள்ளதால், கறவை மாடுகளுக்கு தாது உப்புக்கலவையை அடர் தீவனத்துடன் கலந்து கொடுக்க, கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

உடுமலை சுற்றுப்பகுதியில், கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால், கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துறையினர் கூறியதாவது: சீதோஷ்ண நிலை மாற்றத்தால், கறவை மாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, முறையாக திட்டமிடல் வேண்டும்.

வெப்பநிலை உயர்வாக உள்ளதால், கறவை மாடுகளுக்கு, நாளொன்றுக்கு, 50 கிராம் தாது உப்பு கலவையை, அடர் தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். சுத்தமான குடிநீரை போதியளவு வழங்குவது அவசியம்.

பகல் வெப்பநிலை மற்றும் காலை நேர காற்றின், ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், கால்நடைகளுக்கு வரக்கூடிய, நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, தடுப்பூசி போட, கிராம கால்நடை மருத்துவரை, அணுக வேண்டும்.

மேலும், கால்நடைகளுக்கு, ஏற்படும் வெப்ப அயற்சியினை போக்க, போதிய குடிநீர் வசதி செய்ய வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us