UPDATED : நவ 23, 2026 12:00 AM
ADDED : நவ 22, 2026 11:22 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு செந்தொண்டர் அணிவகுப்பு நேற்று திருப்பூரில் நடைபெற்றது.
கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சுதீப் தத்தா பங்கேற்று, அணிவகுப்பு ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். பேண்டு வாத்திய இசையுடன், சிவப்பு நிற சீருடை அணிந்த கட்சியினர் அணிவகுத்துச் சென்றனர். அவிநாசி சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலம், அரிசிக்கடைவீதியைச் சென்றடைந்தது. தொடர்ந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
