ADDED : பிப் 28, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், சாமுண்டிபுரம், மெயின் ரோடு, வ.உ.சி., நகர், 2வது வீதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
அங்குள்ள டிரான்ஸ்பார்மரை தாங்கியுள்ள சிமென்ட் கான்கிரீட் துாணில், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, விரிசலுடன் காட்சியளிக்கிறது. இது, அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 'விபரீதம் ஏற்படும் முன், இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கியுள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்' என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

