ADDED : பிப் 17, 2025 11:42 PM

திருப்பூர்; திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப்பில் உயர்மட்ட ரயில் பாலம் உள்ளது.
நகரில் சாலை மற்றும் ரயில் பாதையை கடக்கும் பாலம் என்பதால், போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகமாக உள் ளது. ரவுண்டானாவில் அதிகளவில் வந்து வாகனங்கள் திரும்பிச் செல்கின்றன.
ரவுண்டானா அருகே ஊத்துக்குளி ரோட்டில் வலது மற்றும் இடதுபுறம் இரண்டு இடத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
இடதுபுற சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது; வலதுபுற சாலை குழியாகி விட்டது. போலீசார் தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். பத்து நாட்களுக்கு மேலாக இதே நிலை நீடிக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர், மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையை சீரமைத்து தரவில்லை.
இதனால், பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்துக்கு வந்தவுடனே வழியில்லாமல் தடுமாறுகின்றனர். திடீரென பிரேக் போடுவதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
கனரக வாகனத்தை இடது அல்லது வலதுபுறம் முந்திச் செல்லும் போது டூவீலர் ஓட்டிகள் குழாய் உடைப்பு அருகே சென்று தடுமாறுகின்றனர்.

