/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தில்லா திருப்பூர் மாவட்டம் உருவாக்கணும்! கலெக்டர் அறிவுறுத்தல்
/
விபத்தில்லா திருப்பூர் மாவட்டம் உருவாக்கணும்! கலெக்டர் அறிவுறுத்தல்
விபத்தில்லா திருப்பூர் மாவட்டம் உருவாக்கணும்! கலெக்டர் அறிவுறுத்தல்
விபத்தில்லா திருப்பூர் மாவட்டம் உருவாக்கணும்! கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : அக் 02, 2024 06:48 AM
திருப்பூர்: சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர கூட்டம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், எஸ்.பி., அபிஷேக் குப்தா, துணை கமிஷனர்கள் கிரிஷ் அசோக் யாதவ், சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விபத்துக்கான காரணங்களாக டூவீலர் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணியாதது, வாகன ஓட்டும் போது, மொபைல் போன் பேசுவது, சீட்பெல்ட் அணியாதது வலியுறுத்தி ரோடுகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள், நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சாலை வளைவுகள், சந்திப்புகள், குறுகிய ரோடு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் அதிகம் வேகம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.
ரோடுகளில் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவதாலும், ரோடுகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்பவதாலும் விபத்து ஏற்படுகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போலீசார் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும் பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். திருப்பூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அனைத்து அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

