தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கிளஸ்டர்' உருவாக்கினால் பொது பயன்பாட்டு மையம்  

'கிளஸ்டர்' உருவாக்கினால் பொது பயன்பாட்டு மையம்  

'கிளஸ்டர்' உருவாக்கினால் பொது பயன்பாட்டு மையம்  


UPDATED : ஜூன் 06, 2026 06:49 PM

ADDED : ஜூன் 06, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 06:49 PM ADDED : ஜூன் 06, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:தொழில்முனைவோர் அனைவரும் ஒன்றிணைந்து 'கிளஸ்டர்' பதிவு செய்வதன் மூலம், மத்திய, மாநில அரசுகளின் பெருமளவு மானியத்துடன் அதிநவீனப் பொதுப் பயன்பாட்டு மையங்களை அமைத்துப் பயன்பெறலாம் எனத் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அழைப்பு விடுத்துள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் புதிய தொழில்நுட்பப் பயன்பாட்டைப் புகுத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் 'பொதுப் பயன்பாட்டு மையம்' அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர்கள் குழுவாக இணைந்து 'கிளஸ்டர்' முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ரூ.10 கோடிக்கு மேல்: திட்ட மதிப்பீடு 10 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும் மானியம் வழங்கும். எஞ்சிய 20 சதவீதத்தை கிளஸ்டர் அமைப்பினர் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

ரூ.10 கோடிக்குக் கீழ்: திட்ட மதிப்பீடு 10 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து 90 சதவீத மானியத்தை வழங்குகின்றன.

திருப்பூரில் ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் 'நிட்டிங்' மற்றும் 'பிரின்டிங்' ஆகிய பொதுப் பயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசின் எம்.எஸ்.எம்.இ. துறை இணை இயக்குனர் தயாளன், கிளஸ்டர் மேம்பாட்டு அதிகாரி கிரண்தேவ் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், திருப்பூரில் இயங்கி வரும் பொதுப் பயன்பாட்டு மையங்களை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திட்ட ஆலோசகர் திருஞானசம்பந்தம் கூறுகையில், ''அதிகாரிகள் குழு திருப்பூரின் மையங்களை ஆய்வு செய்து பாராட்டியுள்ளது. இங்கு பிரின்டிங், நிட்டிங் துறைகளைத் தொடர்ந்து, தற்போது 'ஆப்செட் பிரின்டிங்' பொதுப் பயன்பாட்டு மையம் அமைக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

இதேபோல், திருப்பூரின் ஒவ்வொரு தொழில் பிரிவினரும் தங்களுக்குள் புதிய கிளஸ்டர்களைப் பதிவு செய்து, அரசின் அள்ளிக்கொடுக்கும் மானிய உதவியுடன் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் தங்களின் தொழிலில் புகுத்தி சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us