ADDED : செப் 27, 2026 07:30 PM
திருப்பூர், அக். 28–
‘சிறிய மனங்களில் பலரும் பெரிய சிந்தனைகள், எண்ணற்ற வாய்ப்புகளின் கொண்டாட்டம்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு, ஸ்மார்ட் மழலையர் பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் அறிவு, படைப்பாற்றல் மற்றும் அறிவியல் கற்றலை வெளிப்படுத்தும் ‘ஸ்மார்ட் குழந்தைகள் கண்காட்சி–2026’ நடந்தது.
குழந்தைகள் உருவாக்கிய அறிவியல் மாதிரிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் ஊடாடும் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.
கண்காட்சியை நிர்வாக இயக்குனர் ஜெயபாரதி, செயலாளர் தினகரன், முதல்வர் ராஜேந்திர பிரசாத், துணை முதல்வர் பிரேமலதா ஆகியோர் பார்வையிட்டனர். குழந்தைகளின் படைப்பாற்றலையும் திறமைகளையும் அவர்கள் பாராட்டினர்.
––
ஸ்மார்ட் மழலையர் பள்ளி வளாகத்தில் நடந்த ‘ஸ்மார்ட் குழந்தைகள் கண்காட்சி’யில் பங்கேற்ற குட்டீஸூடன் பள்ளி நிர்வாகிகள்.
