/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
5 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நற்சான்று
/
5 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நற்சான்று
ADDED : அக் 16, 2024 12:24 AM

திருப்பூர் : தேசிய மின்னணு களஞ்சியம் நிறுவனம், அதிக அளவு விளை பொருட்களை இருப்புவைத்து, பொருளீட்டு கடன் வழங்கிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நற்சான்று மற்றும் கேடயம் வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 5,753.35 டன் தேங்காய் பருப்பு மற்றும் மக்கச்சோளம் இருப்பு வைக்கப்பட்டு, 28 பேருக்கு, 1.98 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
பொங்கலுாரில் 105.35 டன் தேங்காய் பருப்பு இருப்பு வைக்கப்பட்டு, 82.09 லட்சம் ரூபாய்; மூலனுாரில் 250 டன் தேங்காய் பருப்பு இருப்பு வைத்து, 2 கோடி ரூபாய்; உடுமலையில் 1281.55 டன் தேங்காய் பருப்பு இருப்பு வைக்கப்பட்டு, 8.22 கோடி ரூபாய்; காங்கயத்தில் 152.65 டன் தேங்காய் பருப்பு இருப்பு வைக்கப்பட்டு 1.29 கோடி ரூபாய் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டத்திலுள்ள ஐந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கும், நற்சான்று மற்றும் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது மற்றும் சான்று பெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்கள் ராமன், செந்தில்குமார், அழகிரி சாந்தலிங்கம், மாரியப்பன், சிவக்குமார் ஆகியோர், கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து, பாராட்டு பெற்றனர். வேளாண் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், வேளாண் அலுவலர் ரம்யாதேவி உடனிருந்தனர்.