/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிரிக்கெட் போட்டி; கல்லுாரி அணிகள் ஆர்வம்
/
கிரிக்கெட் போட்டி; கல்லுாரி அணிகள் ஆர்வம்
ADDED : செப் 20, 2024 05:37 AM

திருப்பூர் : கல்லுாரி மாணவ, மாணவியருக்கான முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டி, அவிநாசி, அணைப்புதுார், டீ பப்ளிக், பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமை வகித்து, போட்டிகளை துவக்கி வைத்தனர்.
கல்லுாரி மாணவர் பிரிவில், 20 அணிகள், மாணவியர் பிரிவில், நான்கு அணிகளும் பங்கேற்றன. ஆறு ஓவர் கொண்டதாக போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவியர் பிரிவு இறுதி போட்டியில், முதலில் விளையாடிய எல்.ஆர்.ஜி., கல்லுாரி அணி, ஆறு ஓவரில், நான்கு ஓவர் மட்டும் விளையாடி, 11 ரன் மட்டும் எடுத்தது.
எளிய இலக்கை விரட்டிய, அவிநாசிபாளையம், ஜெய்ஸ்ரீ ராம் கல்லுாரி அணி, 1.1 ஓவரில், ஒரு விக்கெட் மட்டும் இழந்து, வெற்றி இலக்கை (12 ரன்) எட்டியது. மாணவர் பிரிவில், 20 அணிகள் பங்கேற்றதால், நேற்று மாலை வரை காலிறுதி போட்டிகள் மட்டும் நடந்தது.
முதல் அரையிறுதி போட்டிக்கு, காங்கயம் அரசு கலைக்கல்லுாரி, ஜெய்ஸ்ரீராம் கல்லுாரி அணியும், மற்றொரு அரையிறுதிக்கு உடுமலை அரசு கலைக்கல்லுாரி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி அணியும் தகுதி பெற்றுள்ளது. வெளிச்சமின்மை காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இன்று அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நடக்கிறது.