sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகரில் குற்றத்தடுப்புக்கான பணிகள்  கேள்விக்குறியானது! கண்காணிப்பு கேமராக்கள் முடக்கம்

/

நகரில் குற்றத்தடுப்புக்கான பணிகள்  கேள்விக்குறியானது! கண்காணிப்பு கேமராக்கள் முடக்கம்

நகரில் குற்றத்தடுப்புக்கான பணிகள்  கேள்விக்குறியானது! கண்காணிப்பு கேமராக்கள் முடக்கம்

நகரில் குற்றத்தடுப்புக்கான பணிகள்  கேள்விக்குறியானது! கண்காணிப்பு கேமராக்கள் முடக்கம்


ADDED : ஜன 14, 2026 06:32 AM

Google News

ADDED : ஜன 14, 2026 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: நகரில் கண்காணிப்புக்காக பொருத்தப்பட்ட கேமராக்கள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், குற்றத் தடுப்பு பணிகள் பாதித்து வருகிறது. கேமராக்களை சீரமைத்து, கட்டுப்பாட்டு அறையையும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியமாகியுள்ளது. உடுமலை நகரில், குற்றத்தடுப்பு பணிகளுக்காக நகராட்சி சார்பில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 100 கண்காணிப்பு கேமராக்கள் சில ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டன.

உடுமலை பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு, திருப்பூர் ரோடு என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குடியிருப்புகளிலும், ரூ.40 லட்சம் செலவில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டன. அனைத்து கேமராக்களும் கேபிள் வாயிலாக இணைக்கப்பட்டு, உடுமலை போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் மையத்தில் கண்காணிக்கும் வகையில், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில், பிரதான வீதிகளில் நிலவும் நெரிசலை பயன்படுத்தி நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் மிக உதவியாக இருந்தன.

செயல்பாட்டில் இல்லை மேலும், சில குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறியவும் கேமரா பதிவுகள் உதவின. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கண்காணிப்பு வசதி, தற்போது முற்றிலுமாக செயல்பாட்டில் இல்லாமல் முடங்கியுள்ளது.

எந்த கேமராக்களும் செயல்படாத நிலையில், கண்காணிப்பு அறையும் மூடப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் திருவிழாவுக்கான பொருட்களை வாங்க நகரில், மக்கள் திரண்டு வருகின்றனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கேமாரக்கள் இல்லாததால், கூட்டத்தை கண்காணிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற குற்றத்தடுப்பு பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை.

நகராட்சி தரப்பில் பொருத்தப்பட்ட கேமராக்கள், பராமரிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறு, பராமரிப்பு செலவு ஒதுக்கீட்டில் காலதாமதம் என தொடர் பிரச்னைகள் ஏற்பட்டது.

போலீஸ் தரப்பில், கேமராக்களை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தன்னார்வ அமைப்புகள் வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, அனைத்து கேமராக்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

பஸ் ஸ்டாண்டிலுள்ள புறக்காவல் நிலையத்துக்கு போலீசார் நியமித்து, கட்டுப்பாட்டு அறையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியமாகும்.

குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட குடியிருப்புகளுக்கு செல்லும் போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும். அவற்றை முறையாக பராமரிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

குடியிருப்போர் நலச்சங்க கூட்டங்களில் பங்கேற்கும் போதும், இத்தகைய அறிவுரைகளை போலீசார் வழங்க தவறுவதில்லை. ஆனால், நகரின் பாதுகாப்பில் முக்கிய அம்சமான கண்காணிப்பு கேமராக்கள் முடங்கியுள்ளது குறித்து, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us