/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குற்றமும் ஆங்கே தரும்!நூல் வியாபாரத்தில் ரூ.30 லட்சம் மோசடி; நான்கு பேர் கைது

ADDED : ஜன 16, 2024 02:39 AM
நுால் வியாபாரத்தில், 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், எஸ்.வி., காலனியை சேர்ந்த பாலாஜி பிரியதர்ஷன், 30 மற்றும் சூர்யா நகரை சேர்ந்த சதீஷ்குமார், 37 ஆகியோர் மேற்கு வங்கத்தை சேர்ந்த சிலருடன் நுால் வாங்குவது தொடர்பாக வியாபாரம் செய்து வந்தனர்.
ஆன்லைன் மூலமாக குறைந்த அளவு பணம் கட்டி, நுாலை பெற்று வந்தனர். கடந்த ஆண்டு இறுதியில் பெரியளவில் நுால் தேவைப்பட்டதால் அவர்களை தொடர்பு கொண்டு பேசினர். அதற்கு, கொல்கத்தாவுக்கு வர அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, பாலாஜி பிரியதர்ஷன், சதீஷ்குமார் ஆகியோர் வெவ்வேறு நாட்களில் கொல்கத்தாவுக்கு பணத்துடன் சென்றனர். நுால் தருவதாக இருவரிடம், 30 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு நுால் கொடுக்காமல் மிரட்டல் விடுத்து மோசடி செய்தனர்.
திருப்பூர் வடக்கு போலீசில், இருவரும் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். இந்த மோசடி தொடர்பாக, கொல்கத்தாவை சேர்ந்த அஜய் தும், 32, ஆகாஷ் தாஸ், 34, அர்ஜூன் ராய், 26 மற்றும் சிர்வாணிபாபு, 58 என, நான்கு பேரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.