ADDED : அக் 04, 2024 12:30 AM

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீஸ்ரீ 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமிதி சார்பில், நவராத்திரி துர்கா பூஜா விழா, வாலிபாளையம் ஹர்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.
இரண்டாவது நாளான நேற்று, காலை, 7:00 மணி முதல் கலச பூஜை சயலபுத்ரி தேவிபூஜைகள் நடைபெற்றன. இன்று காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை பிரம்மச்சாராணி தேவி பூஜை, நாளை சந்திர கண்டா தேவி பூஜை; வரும், 6ம் தேதி குஷ்மண்டா தேவி பூஜை, 7ம் தேதி ஸ்கந்தமாதா தேவி பூஜை, 8ம் தேதி, கார்த்தியாயினி தேவி பூஜை, 9ம் தேதி மஹா காளி தேவி பூஜைகள் நடக்கின்றன.
வரும், 10ம் தேதி மஹா கவுரி பூஜை, முழு இரவு பூஜை, 11ம் தேதி, மஹா அஷ்டமி, சித்திதார்த்ரி பூஜைகளை தொடர்ந்து, அன்னதானம் நடைபெறும். 12ம் தேதி மஹா விஜயதசமி பூஜையும், 13ம் தேதி காலை, 6:00 மணிக்கு மஹா துர்காதேவி விசர்ஜன வழிபாட்டு பூஜையும் நடைபெற உள்ளன.