/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புரட்டாசி பட்ட சாகுபடி விவசாயிகள் மும்முரம்: அறுவடைக்கு அச்சாரம்
/
புரட்டாசி பட்ட சாகுபடி விவசாயிகள் மும்முரம்: அறுவடைக்கு அச்சாரம்
புரட்டாசி பட்ட சாகுபடி விவசாயிகள் மும்முரம்: அறுவடைக்கு அச்சாரம்
புரட்டாசி பட்ட சாகுபடி விவசாயிகள் மும்முரம்: அறுவடைக்கு அச்சாரம்
ADDED : ஜன 03, 2024 12:58 AM
பொங்கலுார்:புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்த பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டி உள்ளது. விரைவில் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்குள் அறுவடையை முடிக்க விவசாயிகள் திட்டமிட்டனர்.
நேற்று முன்தினம் வானிலை அறிக்கையில் தமிழக மேற்கு மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால், விவசாயிகள் கலக்கமடைந்தனர். ஆனால், நேற்றைய அறிக்கையில், மழை பெய்யும் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்தி அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், 'வழக்கமாக ஜன., மாதத்தில் மழை இருக்காது. வறண்ட வானிலை நிலவும் என்பதால் அறுவடை பணிக்கு உகந்ததாக இருக்கும். தற்பொழுது காலநிலை மாற்றத்தால் மழைக்காலம் மாறி வருகிறது. மழை பெய்யும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகைக்குள் அறுவடை பணியை முடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறோம்,' என்றனர்.