/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் நாளை குண்டம் பூ வளர்ப்பு
/
திரவுபதியம்மன் கோவிலில் நாளை குண்டம் பூ வளர்ப்பு
ADDED : பிப் 22, 2024 05:20 AM
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வஞ்சிபுரத்தில், பழமையான திரவுபதியம்மன் பஞ்சபாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில், குண்டம் திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது.
அன்று காலை, 9:30 மணி முதல், 10:30 மணிக்குள், கணபதி ேஹாமம், பள்ளயம் போடுதல், கொடிக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் நாளை (23ம் தேதி) காலை, 7:30 மணிக்கு மேல் இரவு, 8:00 மணி வரை, குண்டம் கட்டுதல், யாக வழிபாடு, குண்டம் பூ வளர்ப்பு நிகழ்ச்சிகளும், 24ம் தேதி, காலை, 7:45 மணி முதல், 8:45 மணி வரை, பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
25ம் தேதி, காலை, 6:30 மணிக்கும், மாவிளக்கு அழைத்தலும், 10:30 மணிக்கு, ஸ்ரீ தர்மராஜா சுவாமி பட்டாபிேஷகமும், 11:30 மணிக்கு, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 26ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, மகா முனிக்கு சிறப்பு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவை முன்னிட்டு, தினமும் மாலை, 6:30 மணிக்கு, குரு சுபாஷ் சந்திரபோஸின், மகாபாரத தொடர் சொற்பொழிவும், நாளை சக்தி கலைக்குழு பவளக்கொடி கும்மியாட்டம் நடக்கிறது.