/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுங்கச்சாவடி விவகாரம்; முத்தரப்பு பேச்சு தோல்வி
/
சுங்கச்சாவடி விவகாரம்; முத்தரப்பு பேச்சு தோல்வி
ADDED : நவ 12, 2024 06:19 AM

திருப்பூர்;திருப்பூர் தெற்கு தாலுகா, வடக்கு அவிநாசிபாளையம் கிராமத்துக்கு உட்பட்ட வேலம்பட்டியில் 'டோல்கேட்' அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
'டோல்கேட்'டை திறக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடி எதிர்ப்பாளர்கள், விவசாயிகள் காத்திருப்பு போராட் டத்தை அறிவித்தனர்.
இச்சூழலில், 'டோல்கேட்' விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஓ., மோகன சுந்தரம் தலைமையில் முத்தரப்பு பேச்சு நேற்று நடந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் செந்தில்குமார், சுங்கச்சாவடி எதிர்ப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர், போலீசார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், பேசிய விவசாயிகள், 'எக்காரணத்தை முன்னிட்டும் டோல்கேட் திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்பட வில்லை. இதனால், கலெக்டரிடம் ஆலோசனை செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று ஆர்.டி.ஓ., தெரிவித்தார். இதனால், முத்தரப்பு பேச்சு தோல்வியில் முடிந்தது.