/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி., பள்ளியில் குட்டீஸ் மகிழ்ச்சி
/
ஏ.வி.பி., பள்ளியில் குட்டீஸ் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 02, 2025 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : காந்தி நகர் ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கோடை விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டது. எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் மகிழ்வுடன் வந்திருந்தனர்.
குழந்தைகளுக்கு விளையாட்டுகள், கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தும் பொம்மலாட்ட நிகழ்ச்சி ஆகியன நடந்தன. குழந்தைகளும் ஆடிப்பாடினர். பெற்றோர் மகிழ்ந்தனர்.
பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் முத்துகருப்பன், ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.