/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வலைவிரித்து காத்திருக்கும் சைபர் மோசடி கும்பல்கள்
/
வலைவிரித்து காத்திருக்கும் சைபர் மோசடி கும்பல்கள்
ADDED : ஆக 10, 2025 10:46 PM

திருப்பூர்: ஆன்லைன் மோடிகள் தொடர்பாக பலவகையில் போலீஸ் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், அன்றாடம் ஏதாவது ஒரு பகுதியில் மக்கள் தங்கள் அறியாமை காரணமாக ஏமாற்றம் அடைகின்றனர்.
ஓட்டல், உணவு, மேப் ரிவ்யூ போன்றவற்றுக்கு ரேட்டிங் கொடுத்து, அதிக 'டாஸ்க்' முடிப்பவர்களுக்கு அதிக கமிஷன்; பங்கு சந்தைகளில் முதலீடு; பார்ட் டைம் பணி என, விதவிதமாக பொய்களை கூறி மக்களை நம்பவைத்து சைபர் கிரைம் மோசடிகள் நடக்கின்றன. படித்தவர்கள், படிக்காதவர்கள் என, எவ்வித பேதமுமின்றி, பேராசை, அறியாமை என, இரண்டையும் பயன்படுத்தி மோசடி கும்பல்கள் கைவரிசை காட்டுகின்றன. திருப்பூரில் மோசடிக்கும்பல்களிடம் ஏமாறுவோர் அதிகம்.
மொபைல் போன்கள், சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சிகரமான விளம்பரம், வங்கியில் இருந்து அறிவிப்பு என்று ஏ.பி.கே., பைல் போன்றவற்றுக்கு 'லிங்க்'கை பகிர்கின்றனர். அதற்குள் சென்று டவுன்லோடு கொடுத்து அல்லது 'லிங்க்'கிற்குள் சென்றால் உடனடியாக மொபைல் போன் 'ஹேக்' செய்யப்பட்டு, மொபைல் போனில் உள்ள அனைத்து விபரங்களையும் திருடி, பணத்தை சுருட்டி விடுகின்றனர்.
''ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக, தெரியாத நபர்களுக்கு தங்கள் அடையாள ஆவணங்கள், விபரங்களை பகிர வேண்டாம்'' என்று போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் தங்கள் பேராசையால் ஏமாந்து விட்டு, புகார் அளிக்க வருவது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.