/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி கல்லுாரி மாணவர்களுக்கு 'சைபர் கிரைம்' விழிப்புணர்வு
/
ரேவதி கல்லுாரி மாணவர்களுக்கு 'சைபர் கிரைம்' விழிப்புணர்வு
ரேவதி கல்லுாரி மாணவர்களுக்கு 'சைபர் கிரைம்' விழிப்புணர்வு
ரேவதி கல்லுாரி மாணவர்களுக்கு 'சைபர் கிரைம்' விழிப்புணர்வு
ADDED : டிச 04, 2024 10:53 PM

திருப்பூர்; அவிநாசி அருகே உள்ள ரேவதி கல்லுாரி குழுமம், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஆகியன இணைந்து சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு வினாடி வினா, குறுநாடகம் ரேவதி கல்லுாரி ஆடிட்டோரியத்தில் நடந்தது.
கல்லுாரி அறங்காவலர்கள் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, ரேவதி ஆகியோர் துவக்கிவைத்தனர். கல்லுாரி நிர்வாக இயக்குனர் டாக்டர் எமரால்டு பொன்னியின் செல்வன், கல்லுாரி முதல்வர்கள் முத்துக்குமார் (பிசியோதெரபி), மெர்லின் ஏஞ்சல்(பாராமெடிக்கல்), டாக்டர் சரவணக்குமார் (ஆக்குபேஷனல் தெரபி), செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
போலீஸ் துணை கமிஷனர் கிரீஸ் யாதவ் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை வழங்கி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.