/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சைக்கிள் பயணம்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சைக்கிள் பயணம்
ADDED : ஜன 12, 2025 11:26 PM
திருப்பூர்; நியூசிலாந்து நாட்டின், ஆக்லாந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் ரோபி டாஞ்சர், 30. சொந்தமாக ஐ.டி., நிறுவனம் நடத்தி வருகிறார். இயற்கை ஆர்வலரான உலக நாடுகளில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பிரசாரம் துவங்கியுள்ளார்.
இதற்காக வாகனங்களின் பயன்பாடுகளை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்க்கவும் வலியுறுத்தி, பல்வேறு நாடுகளின் வழியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்தாண்டு கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், துருக்கி மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளிலும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். கடந்த 220 நாட்களில் 19 நாடுகளில், ஏறத்தாழ 20 ஆயிரம் கி.மீ., அவர் பயணித்துள்ளார்.
சமீபத்தில் விமானம் மூலம் மும்பை வந்த அவர் இந்தியாவில் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை துவங்கியுள்ளார். மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்த அவர், நேற்று முன்தினம் மாலை திருப்பூர் வந்தார்.
திருப்பூர் ரைடர்ஸ் கிளப் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் இரேந்தர் குமார் அவரை செங்கப்பள்ளியில் வரவேற்றார். அங்குள்ள ஓட்டலில் தங்கிய அவர் நேற்று காலை மீண்டும் தன் பயணத்தை துவங்கினார்.
தமிழகத்தில் சில மாவட்டங்களைக் கடந்து, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் செல்லும் அவர் கொல்கட்டாவில் தனது 5 ஆயிரம் கி.மீ., இந்திய பயணத்தை நிறைவு செய்யவுள்ளார். வரும் ஏப்., மாதம் ஆஸ்திரேலியாவில் இந்த விழிப்புணர்வு பயணத்தை முடித்து நியூசிலாந்து திரும்பவுள்ளார்.