ADDED : நவ 24, 2024 11:59 PM
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, யங் இந்தியன்ஸ், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் சார்பில், குழந்தைகளுக்கான சைக்கிளத்தான், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. குழந்தைகள், சிறுவர்கள் மத்தியில் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் நடந்த இந்நிகழ்ச்சியை யங் இந்தியன்ஸ் திருப்பூர் மாவட்ட தலைவர் நிரஞ்சன் கொடியசைத்து துவக்கிவைத்தார். ஹேப்பி சைக்கிள் உரிமையாளர் தங்கராஜ், ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள் ரவிசங்கர், மனோஜ், நந்தகுமார் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 4 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட 400 பேர் பங்கேற்று, சைக்கிள் ஓட்டினர். 4 முதல் 6 வயதுக்கு உட்பட்டோருக்கு 2 கி.மீ., - 7 முதல் 9 வயதுக்கு உட்பட்டோருக்கு 4 கி.மீ., - பத்து முதல் 11 வயதுக்கு உட்பட்டோருக்கு 8 கி.மீ., - 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டோருக்கு 12 கி.மீ., வரை சைக்கிளத்தான் நடத்தப்பட்டது.
பங்கேற்ற அனைவருக்கும் டி-சர்ட், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.