/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காஸ் ஸ்டவ் சர்வீஸ் சென்டரில் இருந்து சிலிண்டர் 'டோர் டெலிவரி' அம்பலம்
/
காஸ் ஸ்டவ் சர்வீஸ் சென்டரில் இருந்து சிலிண்டர் 'டோர் டெலிவரி' அம்பலம்
காஸ் ஸ்டவ் சர்வீஸ் சென்டரில் இருந்து சிலிண்டர் 'டோர் டெலிவரி' அம்பலம்
காஸ் ஸ்டவ் சர்வீஸ் சென்டரில் இருந்து சிலிண்டர் 'டோர் டெலிவரி' அம்பலம்
ADDED : ஆக 21, 2025 11:31 PM

திருப்பூர்; திருப்பூரில், காஸ் சர்வீஸ் என்ற பெயரில், காஸ் சிலிண்டர் விற்பனையில் ஈடுபட்டுவந்த நிறுவனம், மாவட்ட வழங்கல் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது; அந்நிறுவனத்திலிருந்து 51 சிலிண்டர்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில், கூலிபாளையம் நால் ரோடு பகுதியில் 'அய்யப்பன் காஸ் சர்வீஸ் சென்டர்' என்ற பெயரில், காஸ் அடுப்பு பழுது நீக்கும் கடை செயல்படுகிறது. கடையில், சிலிண்டர் விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், பறக்கும்படை தனி தாசில்தார் ராகவி ஆகியோர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
எவ்வித அனுமதியும் பெறாமல், விதிமுறைகளை மீறி, காஸ் சிலிண்டர் விற்பனை செய்தது ஆய்வில் தெரியவந்தது. ஒரு சிலிண்டரிலிருந்து இன்னொரு சிலிண்டருக்கு பாதுகாப்பற்ற வகையில் காஸ் நிரப்பி கொடுத்துள்ளனர்.காஸ் ஏஜென்சியினர் போலவே, சரக்கு ஆட்டோவில், சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு, வீடு, கடைகளுக்கு சிலிண்டர் டோர் டெலிவரியும் கொடுத்துள்ளனர்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வெவ்வேறு நிறுவனங்களின், 51 காஸ் நிரப்பிய மற்றும் காலி சிலிண்டர்கள், வினியோகத்துக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள், தனியார் காஸ் ஏஜென்சியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஸ் சர்வீஸ் சென்டர் நிறுவனத்தினருக்கு, இத்தனை காஸ் சிலிண்டர்கள் எப்படி கிடைத்தது, அந்நிறுவனத்துக்கு சிலிண்டர் வழங்கியது யார், யார் யாரெல்லாம் இந்நிறுவனத்திடமிருந்து சிலிண்டர் வாங்கியுள்ளனர் என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

