/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டி செட்' வாலிபால் போட்டி பள்ளிகளுக்கு அழைப்பு
/
'டி செட்' வாலிபால் போட்டி பள்ளிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 10, 2024 05:07 AM
திருப்பூர், : திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டி செட்) சார்பில், திருப்பூர் பகுதி பள்ளி மாணவ, மாணவியருக்கு வாலிபால் போட்டி வரும், 23 மற்றும், 24ம் தேதி நடத்தப்பட உள்ளது.
சிறுபூலுவப்பட்டி, அமர்ஜோதி கார்டன், டி செட் மைதானத்தில் நடக்கும் போட்டியில், பங்கேற்க ஆர்வமுள்ள அணிகள் வரும், 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம் கிடையாது.
ஒரு பள்ளியில், உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஒரு அணியும், மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒரு அணியிலும் பங்கேற்கலாம்.
தங்கள் அணியின் பெயர், விபரங்களை, டிசெட் அலுவலகத்தில் குறிப்பிட்ட நாள் மாலை 4:00 மணிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 93452 86242, 94864 35245 என்ற எண்களில் அழைக்கலாம்.
மேற்கண்ட தகவலை டி செட் தலைவர்சி.சுப்ரமணியம், செயலாளர் சுப்ரமணியம், பொருளாளர் பொன்னுசாமி உள்ளிட்ட டி செட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.