/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகரில் தினசரி மார்க்கெட் ரோடு திறப்பு! வாகனங்கள் செல்வது இனி எளிதாகும்
/
மாநகரில் தினசரி மார்க்கெட் ரோடு திறப்பு! வாகனங்கள் செல்வது இனி எளிதாகும்
மாநகரில் தினசரி மார்க்கெட் ரோடு திறப்பு! வாகனங்கள் செல்வது இனி எளிதாகும்
மாநகரில் தினசரி மார்க்கெட் ரோடு திறப்பு! வாகனங்கள் செல்வது இனி எளிதாகும்
ADDED : டிச 18, 2025 07:01 AM

திருப்பூர் : திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கே.எஸ்.சி. பள்ளி வீதி, பெரியகடை வீதி, அரிசிக்கடை வீதி இணைப்பு சாலையாக இருந்த தினசரி மார்க்கெட் வீதி திறக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருந்த, தினசரி மார்க்கெட் வளாகம் புதிதாக கட்டும் பணி, 30 கோடி ரூபாய் செலவில், 2020ல் துவங்கியது. நீண்ட இழுபறிக்கு பின், 2023ல் பணி முடிவடைந்தது. பணி முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் பல்வேறு பிரச்னைகளால் மார்க்கெட் திறக்கப்படாமல் உள்ளது; தினசரி மார்க்கெட் வீதியும் மூடப்பட்டது.
நெரிசலில் பயணம்
இதனால், மத்திய பஸ் ஸ்டாண்ட், பல்லடம் ரோட்டில் இருந்து அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, பெரிய கடை வீதி, கே.எஸ்.சி. பள்ளி வீதி செல்லும் வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவை சுற்றி தாராபுரம் ரோடு வழியாக ஒரு கி.மீ., கூடுதலாக போக்குவரத்து நெரிசலில் பயணித்து வந்தனர்.
தவிர்த்த மக்கள்
இந்த வீதியில் இருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் வர வேண்டியவர்கள் நேரடியாக வர முடியாமல், தாராபுரம் ரோடு, மாகாளியம்மன் பஸ் ஸ்டாப் வளைவு சென்று திரும்பி வந்தனர். குறிப்பாக, நகரின் பிரதான சாலைகளில் ஒன்றாக கே.எஸ்.சி. பள்ளி வீதி மற்றும் பழனியம்மாள் பள்ளி வீதியில் 'பீக்ஹவர்' தருணங்களில், நெரிசல் தவிர்க்க முடியாக இருந்தது. 15 நிமிடம் முதல் அரை மணி நேர நெரிசலால், இச்சாலைக்கு வருவதையே வாகன ஓட்டிகள் தவிர்த்தனர்.'புதிய மார்க்கெட் வளாகம் திறப்பது தாமதமானாலும், வீதியை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் என்ன சிக்கல்?,' என, தொடர்ந்து வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பினர். மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் ஆலோசித்து தினசரி மார்க்கெட் வீதியில் இருந்து தடுப்புகளை அகற்றி, இச்சாலையை தற்போது திறந்து விட்டுள்ளனர்.

