/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுால் மில்லில் தீ; பல லட்சத்துக்கு சேதம்
/
நுால் மில்லில் தீ; பல லட்சத்துக்கு சேதம்
ADDED : பிப் 17, 2025 03:02 AM
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார் அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான, கழிவு பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் மில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகி-றது.
இங்கு, 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர் நேற்று காலை, 11:00 மணி அளவில் மில்லில் ஒரு இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் வெள்ள கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்-தனர். நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர். அதற்குள் பஞ்சு அடுக்கி வைத்திருக்கும் பகுதிகளில் தீப்பிடித்து எரிந்து கொண்டி-ருந்தது. இதனால் காங்கேயம் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்-தனர்.
ஆனாலும், மில்லின் கூரை, இயந்திரம், பஞ்சு என, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது.