/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டானா' புயல் எதிரொலி; சந்திரகாசி ரயில் இன்று ரத்து
/
'டானா' புயல் எதிரொலி; சந்திரகாசி ரயில் இன்று ரத்து
'டானா' புயல் எதிரொலி; சந்திரகாசி ரயில் இன்று ரத்து
'டானா' புயல் எதிரொலி; சந்திரகாசி ரயில் இன்று ரத்து
ADDED : அக் 25, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : மேற்கு வங்கம், ஓடிசாவை மிரட்டிய 'டானா' புயல் காரணமாக, திருப்பூரை கடந்து செல்லும் ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த, 24ம் தேதி மேற்கு வங்க மாநிலம் சந்திரகாசியில் இருந்து மங்களூரு இயங்க வேண்டிய ரயில் (எண்:22851) ரத்து செய்யப்பட்டது.
நேற்று ஈரோடு, திருப்பூர், கோவையை கடந்து மங்களூரு செல்ல வேண்டிய ரயில் இயக்கம் இல்லை. இணை ரயில் ரத்தால், இன்று (26ம் தேதி) இரவு மங்களூரில் இருந்து, சந்திரகாசிக்கு இயங்க வேண்டிய ரயில் (எண்:22852) ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று புறப்படாததால், நாளை (ஞாயிறு) காலை, 7:15க்கு திருப்பூருக்கு இந்த ரயில் வராது.