/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.என்.,புரம் நால்ரோட்டில் விபத்து அபாயம்
/
கே.என்.,புரம் நால்ரோட்டில் விபத்து அபாயம்
ADDED : மார் 27, 2025 12:27 AM

பல்லடம்; பல்லடம் அருகே கே.என்.,புரம் நால் ரோட்டில், வாகன ஓட்டிகளுக்கு, விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
பல்லடத்தை அடுத்த, கே.என்., புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், ஊருக்கு செல்லும் முக்கிய வீதிகள் உள்ளன.
இந்த வீதிகளில் இருந்து, வாகன ஓட்டிகள், தேசிய நெடுஞ்சாலையை கடப்பது வாடிக்கையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் இந்த நால்ரோடு பகுதி, வாகன ஓட்டிகளுக்கு, விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
சமீபத்தில், புதுப்பிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. குறிப்பாக, பல்லடம் - கோவை நோக்கி உள்ள சாலை, மிகவும் தாழ்வாக இருப்பதால், வாகனங்கள் மித மிஞ்சிய வேகத்தில் வருகின்றன. நால்ரோடு பகுதியில், வாகனங்கள், பாதசாரிகள் ரோட்டை கடக்க முயற்சிக்கும் போது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டி உள்ளது.
நால் ரோட்டில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த காலங்களிலும், இப்பகுதியில் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் நலன் கருதி, இப்பகுதியில், வேகத்தடை அல்லது வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.