/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் தொட்டி இடியும் அபாயம்; பகலில் தெரு விளக்கு எரியும் அவலம்
/
குடிநீர் தொட்டி இடியும் அபாயம்; பகலில் தெரு விளக்கு எரியும் அவலம்
குடிநீர் தொட்டி இடியும் அபாயம்; பகலில் தெரு விளக்கு எரியும் அவலம்
குடிநீர் தொட்டி இடியும் அபாயம்; பகலில் தெரு விளக்கு எரியும் அவலம்
ADDED : மார் 25, 2025 06:52 AM

மின்சாரம் வீண்
திருப்பூர், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் பகலில் தெருவிளக்குகள் எரிந்து மின்சாரம் வீணாகிறது. மின்விளக்குகளை சரியான நேரத்துக்கு அணைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.
- ராஜகுரு, கோவில்வழி. (படம் உண்டு)
அவிநாசி, தபால் அலுவலகம் முன் உள்ள கம்பத்தில், பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது.
- சண்முகசுந்தரம், அவிநாசி. (படம் உண்டு)
கிளைகளை வெட்டுங்கள்
சங்கிலிபள்ளம் ஓடை, தரைப்பாலம் அருகே வைக்கப்பட்டுள்ள, நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகையில் ஊர் பெயர் தெரியாத அளவு அதிகமாக மரங்கள் வளர்ந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் கவனத்து கிளைகளை வெட்ட வேண்டும்.
- பிரணவ், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)
திருப்பூர், புஷ்பா தியேட்டர் ஸ்டாப் செல்லும் ரயில்வே உயர்மட்ட பாலத்தின் மேல் பகுதியில் உயரமாக, முட்புதர்கள், முள்செடிகள் வளர்ந்து வருகிறது. மரக்கிளையை வெட்ட வேண்டும்.
- ஆறுமுகம், அவிநாசி ரோடு. (படம் உண்டு)
நாய்கள் தொல்லை
திருப்பூர், 23வது வார்டு, சூர்யா காலனி - கோல்டன் நகர் வீதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- கோவிந்தன், சூர்யா காலனி. (படம் உண்டு)
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வெளிவளாகத்தில் நாய்கள் சுற்றித்திரிகிறது. வாகனங்களுக்கு கீழ் படுத்துறங்கி, அசுத்தம் செய்கிறது.
- முருகன், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)
முடங்கிய சாலைப்பணி
திருப்பூர், அவிநாசி ரோடு - பி.என்., ரோடு சந்திப்பு, சரவணா வீதியில் ரோடு போட கற்கள் கொட்டி அப்படியே உள்ளது. வாகன ஓட்டிகள் சென்று வர முடியவில்லை.
- தினேஷ்குமார், சரவணா வீதி. (படம் உண்டு)
சுகாதாரச் சீர்கேடு
திருப்பூர், திருவள்ளுவர் தோட்டம் பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். அள்ளாமல் உள்ள குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- வின்சென்ட்ராஜ், திருவள்ளுவர் தோட்டம். (படம் உண்டு)
தொட்டி சேதம்
திருப்பூர், 19வது வார்டு, பாரதிநகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமாகியுள்ளது. இடிந்து விழும் முன், சீரமைத்தால், மக்களுக்கு ஆபத்து விலகும்.
- ரஞ்சித், பாரதி நகர். (படம் உண்டு)
சாலையை சீரமைக்கலாமே!
திருப்பூர், 15 வேலம்பாளையம் சிக்னல் நால்ரோடு சந்திப்பில் சாலையை சீரமைக்க வேண்டும். குழாய் உடைப்பு ஏற்பட்டதை சரிசெய்யாமல், பாதி துாரத்துக்கு 'பேரிகார்டு' வைக்கப்பட்டுள்ளது.
- விஜி, 15 வேலம்பாளையம். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம் பெட்ரோல் பாங்க் எதிரே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலையும் சேதமாகியுள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- புஷ்பலதா, ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)
* திருப்பூர், ஆத்துப்பாளையம் ரோடு, வெங்கமேட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சாலை சேதமாகியுள்ளது. குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.
- கார்த்திக், ஆத்துப்பாளையம். (படம் உண்டு)
போக்குவரத்து இடையூறு
திருநீலகண்டபுரம், வடக்கு வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக, பெரிய தண்ணீர் குழாயை நடக்க வழியின்றி போட்டு வைத்துள்ளனர். மாநகராட்சியினர் அதனை அகற்ற வேண்டும்.
- செந்தில்குமார், திருநீலகண்டபுரம். (படம் உண்டு)
ரியாக் ஷன்
தண்ணீர் வீணாகாது
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, ரயில்வே கேட் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டுள்ளது.
- நாராயணன், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)