ADDED : செப் 20, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ள டவுன் ஹால் பஸ் ஸ்டாப் நிழற்குடை பராமரிப்பின்றி சேதமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. ரயில்வே ஸ்டேஷன், மத்திய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், பள்ளி மாணவர்கள் என தினமும் ஏராளமானோர் இந்த பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் நவீன முறையில் அமைக்கப்பட்ட நிழற்குடையின் மேற்கூரை, இருக்கைகள், தரைத்தளம் ஆகியவை தற்போது சேதமடைந்துள்ளன. இதனால் பயணிகள் அச்சத்துடன் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
––
டவுன்ஹால் பஸ் ஸ்டாப் நிழற்குடை ஆபத்தான நிலையில் உள்ளது.
