/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருள்மயம் - சகதிக்காடு சாலைகளில் சங்கடம்
/
இருள்மயம் - சகதிக்காடு சாலைகளில் சங்கடம்
ADDED : பிப் 17, 2025 11:28 PM

விளக்கு பழுது
அவிநாசி, செம்பியநல்லுார் ஊராட்சி, சென்னிமலைக் கவுண்டன்புதுார் அரசு பள்ளி வீதியில் ஆறு மாதமாக தெருவிளக்கு எரிவதில்லை.
- பிரகாஷ், சென்னிமலைக் கவுண்டன்புதுார். (படம் உண்டு)
திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர், பத்மாவதிபுரம் எதிர் வீதியில் தெருவிளக்குகள் இரண்டு மாதமாக எரிவதில்லை.
- அசோக்குமார், பத்மாவதிபுரம். (படம் உண்டு)
சுகாதாரக்கேடு
திருப்பூர், ஜெய் நகர் போஸ்ட் ஆபீஸ் வீதியில் உபயோகமில்லாமல் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அருகே குப்பை கழிவு கொட்டப்படுகிறது. புதர்மண்டி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- வசந்தி, ஜெய் நகர். (படம் உண்டு)
சாலையில் கழிவுநீர்
வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, மகாலட்சுமி நகரில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி சேறும், சகதியுமாக உள்ளது. மண் கொட்டி சாலையை சீரமைக்க வேண்டும்.
- ராஜேந்திரன், மகாலட்சுமி நகர். (படம் உண்டு)
வீடு முன் கழிவுநீர்
திருப்பூர், எட்டாவது வார்டு, மும்மூர்த்தி நகர் கிழக்கு வீதியில் கழிவுநீர் வீடுகள் முன் தேங்கி நிற்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- தங்கராஜ், மும்மூர்த்தி நகர். (படம் உண்டு)
சறுக்கும் சாலை
பல்லடம், ஸ்டேட் பாங்க் ஆப் இண்டியா முன் சாலை சேதமாகியுள்ளது. மண் மற்றும் கற்கள் நிறைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.
- பழனிசாமி, பல்லடம். (படம் உண்டு)
நிறைந்த குப்பை
திருப்பூர், நெருப்பெரிச்சல் - தோட்டத்துப்பாளையம் ரோட்டில் குப்பை தொட்டி நிறைந்த பின், குப்பைகளை அகற்றுவதில்லை. தினசரி குப்பை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கீதா, தோட்டத்துப்பாளையம். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
தாராபுரம், சுந்தரம் அக்ரஹாரம் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்யாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.
- இளங்கோ, தாராபுரம். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், சாமுண்டிபுரம், அறிவொளி வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- ரவிக்குமார், அறிவொளி வீதி. (படம் உண்டு)
ரியாக் ஷன்
கொட்டப்பட்ட மண்
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, மாரியம்மன் கோவில் வீதியில் சாலை சேதமாகி, குழியாகியிருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், மாநகராட்சி மூலம் மண் கொட்டப்பட்டுள்ளது.
- சங்கர்சதீஷ், பாளையக்காடு. (படம் உண்டு)

