/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலைக்கோவிலில் தரிசனம்; முருக பக்தர்கள் பரவசம்
/
மலைக்கோவிலில் தரிசனம்; முருக பக்தர்கள் பரவசம்
ADDED : பிப் 04, 2026 05:25 AM
திருப்பூர்: மங்கலம் அருகேயுள்ள வேலாயுதம்பாளையம் மலைக்கோவில், ஸ்ரீ குழந்தை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூசத் தேரோட்டம் கடந்த மாதம், 25ம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது.
தினசரி சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை ஆகியன நடந்தது.
1ம் தேதி, திருத்தேரில் சுப்ரமண்யர், வள்ளி தெய்வானை சமேதரமாக எழுந்தருளினார். தொடர்ந்து தேர் கிரிவலம் நடந்தது. நேற்று முன்தினம் பரிவேட்டை காட்சி நடந்தது.நேற்று காலை மஹா தரிசனத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. அதன்பின், உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
விழாவை முன்னிடட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. நேற்று நடைபெற்ற மஹா தரிசன சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்டனர்.

