ADDED : பிப் 16, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் சார்பில், கொங்கு மண்டல மாநாடு வரும், 23ம் தேதி திருப்பூரில் நடைபெறுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் அன்சாரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நுார்தீன், செயலாளர் யாசர் அராபத் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கொங்கு மண்டல மாநாட்டை சிறப்பான முறையில் நடத்த மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் ஆகியன குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதவிர, ஜாதி வாரி கணெக்கெடுப்பு, வக்பு வாரிய சட்ட திருத்தம் ஆகியன குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.