/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணையில் செத்து மிதக்கும் வன விலங்குகள்
/
அணையில் செத்து மிதக்கும் வன விலங்குகள்
ADDED : ஜூலை 03, 2025 08:22 PM

உடுமலை; உடுமலை திருமூர்த்தி அணையில், இறந்து மிதக்கும் மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை அப்புறப்படுத்த வேண்டும்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணை, பி.ஏ.பி., பாசனம் மற்றும் உடுமலை நகராட்சி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றித்திலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும், கூட்டு குடிநீர் திட்ட ஆதாரமாகவும் உள்ளது.
திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, மலைகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள காண்டூர் கால்வாய் வழியாக நீர் வருவதோடு, சுற்றிலும் வனம் உள்ளதால், வன விலங்குகள் குடிநீர் தேடி அணைக்கு வருகின்றன.
இதில், தவறி விழுந்து ஏராளமான வன விலங்குகள் உயிரிழந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் யானை இறந்த நிலையில், அதனை எடுத்து, பிரேத பரிசோதனை செய்து வனத்துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதியில் புதைத்தனர்.
இந்நிலையில், திருமூர்த்தி அணைக்குள், மான் மற்றும் காட்டுப்பன்றிகள் இறந்து, பல நாட்களான நிலையில், உடல் சிதைந்த நிலையில் மிதந்து வருகிறது.
எனவே, குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ள, அணை நீரில் செத்து மிதக்கும் வன விலங்குகளின் உடல்களை, வனத்துறையினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.