/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழில் பெயர்ப்பலகை 15ம் தேதி வரை அவகாசம்
/
தமிழில் பெயர்ப்பலகை 15ம் தேதி வரை அவகாசம்
ADDED : மே 04, 2025 12:28 AM
திருப்பூர்: வரும், 15ம் தேதிக்குள், அனைத்து பெயர் பலகைகளும், தமிழை முதன்மையாக கொண்டு இருக்க வேண்டுமென, தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகளை, தமிழில் வைக்க வேண்டுமென, கடந்த மாதம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், தொழிற்சாலைகளின் பெயர் பலகைகள், மே 15ம் தேதிக்குள், தமிழ், அதன் பிறகு ஆங்கிலம் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளில் அமைய வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தொழிலாளர் துறை உதவிகமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் எழுத்தானது முதன்மையானதாகவும், ஆங்கில எழுத்தை காட்டிலும் பெரியதாகவும் இருக்க வேண்டும். தமிழ்மொழியை முதன்மைப்படுத்தி பெயர் பலகை வைக்க, 15 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழை முதன்மைப்படுத்தி பெயர் பலகை வைப்பதை உறுதி செய்து, அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும்.
அனைத்து தொழில் அமைப்புகள், உரிமையாளர் சங்கங்கள், தங்கள் உறுப்பினர்களுக்கு தெரிவித்து, மே 15க்குள் தமிழில் பெயர் பலகை வைத்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.