தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பட்டுப்போன மரம்; சாயும் அபாயம்

பட்டுப்போன மரம்; சாயும் அபாயம்

பட்டுப்போன மரம்; சாயும் அபாயம்


UPDATED : நவ 29, 2026 05:36 PM

ADDED : நவ 29, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 05:36 PM ADDED : நவ 29, 2026 05:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கால்வாய் அடைப்பு

பல்லடம், மாணிக்காபுரம் ரோட்டில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

– ரத்தினவேல், மாணிக்காபுரம். (படம்)

திருப்பூர், மங்கலம் ரோடு பழக்குடோன் ஸ்டாப்பில் கால்வாய் அடைப்பால் கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது.

– மோகன், மங்கலம் ரோடு. (படம்)

செரங்காடு – சந்திராபுரம் ரோட்டில் மழை பெய்யும்போதெல்லாம் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறு போல் வழிந்தோடுகிறது.

– ரமேஷ், சந்திராபுரம். (படம்)

கழிவுகளால் இடையூறு

பிச்சம்பாளையம், சொர்ணபுரி கார்டன் 5வது வீதியில் சாக்கடை கழிவு, மண் அள்ளி ரோட்டில் அப்படியே போடப்பட்டுள்ளது.

– மனோஜ், சொர்ணபுரி கார்டன். (படம்)

குப்பை தேக்கம்

மங்கலம், பூக்களிப்பாளையத்தில் ரோட்டில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். குப்பை தேக்கத்தால் துர்நாற்றம் வீசுகிறது.

– அருள் மார்ட்டின், பூக்களிப்பாளையம். (படம்)

பல்லடம், கொசவம்பாளையம் ரோட்டில் வழிநெடுகிலும் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதிக்க வேண்டும்.

– பால்ராஜ், கொசவம்பாளையம். (படம்)

கொடி படரலாமா?

ஆண்டிபாளையம், பொது சுத்திகரிப்பு நிலையம் செல்லும் நொய்யல் ரோட்டில் உயர்கோபுர மின்கம்பம் மீது கொடி படர்ந்துள்ளது.

– வரதராஜன், ஆண்டிபாளையம். (படம்)

ஆபத்து காத்திருப்பு

திருப்பூர், வாலிபாளையம் சாய்பாபா கோவில் அருகே பட்டுப்போன மரம் விழும் நிலையில் உள்ளது. அதற்கு முன்பாக பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

– ரஞ்சித், வாலிபாளையம். (படம்)

சாலை சேதம்

தென்னம்பாளையம், ஸ்கூல் வீதி ரேஷன் கடை அருகே சாலை சேதமாகி மழைநீர் தேங்கியுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.

– செல்வராஜ், தென்னம்பாளையம். (படம்)

தண்ணீர் வீண்

திருப்பூர், தாராபுரம் ரோடு கே.எஸ்.சி. ஸ்கூல் சந்திப்பு சாலை அருகே குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது.

– அசோக், தாராபுரம் ரோடு. (படம்)

ரியாக்ஷன்

சாலை அமைப்பு

பெருமாநல்லுார் – குன்னத்துார் ரோடு, வி.ஏ. ரெசிடென்சி சர்வீஸ் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதாக ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது புதிய ரோடு போடும் பணி துவங்கியுள்ளது.

– ரேணுகா, மாந்தோட்டம். (படம்)

சபாபதிபுரம், விநாயகர் கோவில் சுரங்கபாலம் சந்திப்பு பிரதான சாலை வளைவில் சாலை சேதமாகியிருந்தது குறித்து செய்தி வெளியானது. மாநகராட்சி மூலம் சாலை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

– தீபக் டேனியல், சபாபதிபுரம். (படம்)

கால்வாய் துாய்மை

திருப்பூர், பத்மாவதிபுரம் கிழக்கு வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியானது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டன.

– பழனிசாமி, பத்மாவதிபுரம். (படம்)

மின்கம்பம் மாற்றம்

திருப்பூர், 17வது வார்டு காட்டன்மில் ரோட்டில் மின்கம்பம் அடிப்பாகம் சேதமாகி விழும் நிலையில் இருந்தது. செய்தி வெளியானதும், மின்வாரிய ஊழியர்களால் மின் கம்பம் மாற்றப்பட்டுள்ளது.

– முத்துராஜ், காட்டன் மில் ரோடு. (படம்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us