/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
/
கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
ADDED : மார் 26, 2025 11:31 PM
திருப்பூர்; சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், திருப்பூர் மாவட்ட அளவில் கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி துவக்க விழா, தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஒன்றே குலம், ஒருவனே தேவன்; மனித நேயம் ஓங்கட்டும், மத வெறி நீங்கட்டும்; மக்காளட்சியின் மாண்பும், மதசார்பற்ற அரசும்; ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு; இந்திய சமூக நீதி வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கு என பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.
மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் பத்மநாபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கல்பனா உட்பட பலர் பங்கேற்றனர்.