ADDED : மார் 11, 2024 01:41 AM

அவிநாசி;அவிநாசி வட்ட அருந்ததியர் அறக்கட்டளை சார்பில் சமூகமடம் மற்றும் திருமண மண்டபம் கட்டட பணி குறித்து தலைவர் நீலமலைமுத்துசாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் முருகேசன், துணை தலைவர் கருப்புசாமி, ஒருங்கிணைப்பாளர் நைனான் மற்றும் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் 15 சென்ட் ஒதுக்கி தந்து, அதில் அரசு மூலம்கட்டப்பட்ட சமுதாயக் கூட கட்டடப் பணிகள் முழுமை அடையாமல் உள்ளது .
அதில் குடிநீர், கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்து தராமல் இழுத்தடித்து வருகின்றனர். மேலும் 33 கிராமங்களில் வசித்து வரும் அருந்ததியர் மக்கள் 30 வருடங்களாக பயன்படுத்த முடியாமல் உள்ளதை திருப்பூர் கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
15 சென்ட் நிலத்தை நில அளவை செய்து அவிநாசி வட்ட அருந்ததியர் சமூக மடம் என்ற அறக்கட்டளையின் பெயரில் பட்டா வழங்கிட வேண்டும்.
கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் 33 கிராமங்களில் வசிக்கும் அருந்ததியர் மக்கள் திரண்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
அறக்கட்டளை ஆண்டு விழாவில் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்க பரிசு தொகை வழங்குதல்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
