/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு
/
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு
ADDED : டிச 20, 2024 03:48 AM
அனுப்பர்பாளையம்; திருப்பூர் கணக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து குடியிருப்போர் நல சங்கத்தினர் வரும் 23ம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்துள்ளனர்.
திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, 1வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீனிவாசா நகரில் மூன்று வீதிகள் உள்ளன. வீதிகளில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லை.
மூன்று வீதிகளில் சாலை வசதி ஏற்படுத்த, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் அப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் சார்பில், கடந்த 2023 அக்., மாதம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் ஊராட்சியில் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்தியதும் இரண்டு வீதிகளில் மட்டும் சாலை அமைக்கப்பட்டது. ஒரு வீதியில் அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து, ஊராட்சியில் முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் காலம் கடத்தி வருவதாக குடியிருப்போர் நல சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து குடியிருப்போர் நல சங்கத்தினர், 23ம் தேதி காலை ஊராட்சி மன்ற அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அப்பகுதியினர் அறிவித்துள்ளனர்.