ADDED : ஜூன் 01, 2025 07:10 AM
திருப்பூர் : திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். வடக்கு தொகுதி தேர்தல் பார்வையாளர் ராமமூர்த்தி, முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் ஆகியோர் பேசினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான, ஜூன், 3ல் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்குவது, ரத்ததான முகாம், பொது மருத்துவ முகாம் நடத்துவது, மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குவது, ஆதரவற்ற மக்களுக்கு உணவு, உடை மற்றும் மரக்கன்று நட்டு சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட அவை தலைவர் நடராஜன், மாநில பேச்சாளர் குழு மகளிர் அணி செயலாளர் உமாமகேஸ்வரி, மாநகராட்சி 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், மாநகர துணை செயலாளர்கள் ராமசாமி, தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.