/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்'
/
'தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்'
ADDED : ஜன 09, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில், மண்டல நல்லொழுக்க பயிற்சி கூட்டம், வடுகன்காளிபாளையத்தில் நடந்தது.
மாநில செயலாளர் பைசல், 'பெற்றோர்களும் பொறுப்பாளர்களே'என்ற தலைப்பில் பேசினார். மாநில பேச்சாளர், ரஹிம், 'இலக்கை மறந்த இளைய சமுதாயம்' என்ற தலைப்பில் பேசினார். பல்லடம், மங்கலம், திருப்பூர் பகுதிகளை சேர்ந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கனமழை பாதித்த மாவட்டங்களில் ஏற்பட்ட சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்து, தேவையான உதவியை வழங்க வேண்டும், என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.