ADDED : பிப் 13, 2024 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:அமராவதிபாளையத்தில் கால்நடை சந்தை நேற்று நடந்தது. வழக்கமாக சந்தை துவங்கிய ஒரு மணி நேரத்தில், மைதானம் நிரம்பும் அளவு மாடுகள் வரும்; ஆனால், நேற்று நிலைமை அவ்வாறு இல்லை. மைதானத்தின் ஒரு பகுதி காலியாகவே இருந்தது. மாடுகள் விற்பனை சுறுசுறுப்பு இல்லாமல், சற்று மந்தமாக இருந்தது.
சந்தை ஏற்பட்டாளர்கள் கூறுகையில், 'மழையில்லாமல், வெயில் தொடர்ந்து பதிவாகி வருகிறது. சீசன் டல்லாக இருப்பதால், மாடு வரத்தும், விற்பனையும் குறைவு. 95 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது,' என்றனர்.