/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டெகோஹட் லைப்ஸ்டைல்' கண்காட்சி கோலாகலம்
/
'டெகோஹட் லைப்ஸ்டைல்' கண்காட்சி கோலாகலம்
ADDED : பிப் 17, 2024 01:38 AM
திருப்பூர்;'டெகோஹட் லைப்ஸ்டைல்' கண்காட்சி, அதிநவீன ஆடைகள், பேன்சி நகைகளுடன், திருப்பூரில் கோலாகலமாக நடந்து வருகிறது.
திருப்பூர், அவிநாசி ரோடு, வேலம்பாளையம் ரோட்டில் உள்ள பார்ச்சூன் பார்க் ஓட்டலில் நடக்கும் கண்காட்சியை, காலை, 10:00 முதல், இரவு, 9:00 மணி வரை பார்வையிடலாம்; நுழைவு கட்டணம் இல்லை. பெண்களுக்கான, நவநாகரீக ஆடைகள், சேலைகள், சுடிதார் மற்றும் 'அக்சசரீஸ்' கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
பெண்கள் அதிகம் வாங்கி அணியும் விலையில், ஆடைகள், பேன்சி நகைகள் இடம்பெற்றுள்ளன. பச்சிளம் குழந்தைகள் துவங்கி, 13 வயது வரையுள்ள, சிறுவர், சிறுமியருக்கான கண்கவர் ஆடைகளும் இடம்பெற்றுள்ளன.
மெத்தை விரிப்பு, டவல், 'டாப்' வகைகள், சல்வார், குர்தீஸ், 'மொடால் சில்க்' உட்பட, பல்வேறு வகை சேலைகள், குழந்தைகளுக்கான இரவுநேர ஆடைகள் என, கண்காட்சி களைகட்டியிருக்கிறது.
கண்காட்சி அமைப்பாளர் உமா சுரேஷ் கூறுகையில், ''கடந்த, 10 ஆண்டுகளாக, பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கான ஆடை ரகங்கள், அணிந்து மகிழும் எளியவகை நகைகள், வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை, ஒரே இடத்தில் வாங்கி மகிழ, 'டெகோஹட் லைப்ஸ்டைல்' கண்காட்சி நடத்தப்படுகிறது. விவரங்களுக்கு, 96004 10011 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்களிலும், decohutlifestyleexibition என்ற 'பேஸ்புக்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம்,'' என்றனர்.