/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டெடிகேடட் பீட்' திட்டம்: மக்களிடம் நல்ல வரவேற்பு!
/
'டெடிகேடட் பீட்' திட்டம்: மக்களிடம் நல்ல வரவேற்பு!
'டெடிகேடட் பீட்' திட்டம்: மக்களிடம் நல்ல வரவேற்பு!
'டெடிகேடட் பீட்' திட்டம்: மக்களிடம் நல்ல வரவேற்பு!
ADDED : செப் 29, 2024 01:58 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் அமல்படுத்தப்பட்டுள்ள 'டெடிகேடட் பீட்' போலீஸ் திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதால், போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் குற்ற சம்பவங்கள் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் வகையில், 'டெடிகேடட் பீட்' திட்டம் நேற்று முன்தினம் மாநகரில் அமலுக்கு வந்தது. அதில், வடக்கில், 12, தெற்கில், 10 என, மொத்தம், 22 போலீஸ் 'பீட்' அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பீட்டுக்கும், தலா, இரு போலீஸ், ரோந்து வாகனம், பிரத்யோக மொபைல் போன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மூன்று கட்ட, சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். ரோந்து பணியோடு, குறிப்பிட்ட நேரத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து மக்களின் பிரச்னைகளை அணுகவும் அறிவுறுத்தியிருந்தனர்.
இச்சூழலில், புதிய 'பீட்' திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. முதல் நாளே பல்வேறு பிரச்னைகளை சம்பந்தப்பட்ட போலீசார் அணுகி நடவடிக்கை எடுத்தனர். அவுட் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த போலீசாரிடம், குடும்ப பிரச்னை, குடியிருப்பு பகுதியில் 'குடி'மகன்களின் அட்ராசிட்டி, நள்ளிரவு நேரங்களில் தேவையில்லாமல் கும்பலாக வாலிபர்கள் திரண்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற புகார்கள் நேரிலும், மொபைல் போனிலும் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். உடனே, சம்பந்தப்பட்ட போலீசார் சென்று பிரச்னையை களைத்தனர்.
மேலும், அந்தந்த ஸ்டேஷன் பகுதியில் 'பீட்' போலீசாரின் பகுதி, மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் போன் எண் குறித்த சிறிய அளவிலான தட்டிகள் மக்கள் பார்வைக்கு ஆங்காங்கே வைத்துள்ளனர்.
---
'டெடிகேடட் பீட்' திட்டத்தில், புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.