தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிடித்தம் செய்த பி.எப்., நிதி தொழிலாளர்கள் போராட்டம்

பிடித்தம் செய்த பி.எப்., நிதி தொழிலாளர்கள் போராட்டம்

பிடித்தம் செய்த பி.எப்., நிதி தொழிலாளர்கள் போராட்டம்


ADDED : அக் 23, 2024 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 12:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலையில் தனியார் நுாற்பாலையில், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை பெற்றுத்தர வேண்டுமென, பாதிக்கப்பட்ட சந்தாதாரர்கள் போராட்டம் நடத்தினர்.

உடுமலை, கணபதிபாளையம் பகுதியில், பார்த்தசாரதி ஸ்பின்னிங் மில்ஸ் இயங்கி வந்தது. அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களிடம், வருங்கால வைப்பு நிதிக்காக, பணம் பிடிக்கப்பட்டது.

பிறகு, நுாற்பாலை மூடப்பட்டதால், பி.எப்., நிலுவை பணத்தை பெற்றுத்தர வேண்டுமென, திருப்பூர் வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். முன்னதாக, அலுவலகம் முன்பு, முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூறியதாவது: கடந்த, 1982ம் ஆண்டு முதல், பார்த்தசாரதி ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வந்தோம். மொத்தம், 125 தொழிலாளர்களிடம், வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்டது.

இருப்பினும், நிதி பங்களிப்பை உரிய காலத்தில் செலுத்தாமல், 2015ல் நுாற்பாலை மூடப்பட்டது. ஓய்வு பெற்ற பிறகும், பணிக்கொடை மற்றும் உரிய ஓய்வூதியம் பெற முடியாமல் துன்பப்படுகின்றனர்.

பல ஆண்டுகளாக, மனு கொடுத்து முறையிட்டு வருகிறோம். துறைசார்ந்த நடவடிக்கை எடுத்து, பிடித்தம் செய்த தொகை மற்றும் பி.எப்., சலுகைகளை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us