/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயல்பாட்டுக்கு வராத அவிநாசி-அத்திக்கடவு திட்டம்
/
செயல்பாட்டுக்கு வராத அவிநாசி-அத்திக்கடவு திட்டம்
ADDED : ஜன 31, 2024 11:59 PM
திருப்பூர்: தேர்தலின் போது பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி அறிக்கை:கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நீண்ட காலமாக நிலவும் வறட்சிக்கு தீர்வு காணும் விதமாக அவிநாசி அத்திக்கடவு திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகளுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும். குடிநீர் மற்றும் பாசன வசதி மேம்படும் என இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. திட்டம் துவங்கி 3 ஆண்டுகளுக்கும் முடிய வேண்டியது தற்போது 5 ஆண்டாகியும் முழுமை பெறாமல் உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், இத்திட்டம் பிரசார கேடயமாக பயன்படுத்தப்படுகிறது.பெருமளவு நிறைவடைந்துள்ள பணிகள் சோதனை ஓட்டத்தில் உள்ளன. இதை விரைவுபடுத்தி, வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து விவசாயிகள் குறை கேட்பு நிகழ்விலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.