sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 லேப்டாப் வழங்க தாமதம்; விழாவில் 4 மணி நேரம் மாணவர்கள் காத்திருப்பு

/

 லேப்டாப் வழங்க தாமதம்; விழாவில் 4 மணி நேரம் மாணவர்கள் காத்திருப்பு

 லேப்டாப் வழங்க தாமதம்; விழாவில் 4 மணி நேரம் மாணவர்கள் காத்திருப்பு

 லேப்டாப் வழங்க தாமதம்; விழாவில் 4 மணி நேரம் மாணவர்கள் காத்திருப்பு


ADDED : ஜன 06, 2026 08:48 AM

Google News

ADDED : ஜன 06, 2026 08:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தில், லேப்-டாப் வழங்க, நான்கு மணி நேரமாக மாணவ, மாணவியரை அதிகாரிகள் காத்திருக்க வைத்தனர்.

'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தின் கீழ், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதையொட்டி, தாராபுரம், மூலனுார், கரையூரில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்கேற்று வழங்கினார். மாவட்டம் முழுதும், ஆயிரத்து, 441 பேருக்கு லேப்-டாப் வழங்கப்பட்டது.

லேப்-டாப் வழங்க உடுமலை, காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட மாவட்டம் முழுதும் அரசு கல்லுாரி மாணவ, மாணவியரை அழைத்து வந்து அரங்கில் அமர வைத்தனர். சென்னையில் முதல்வர் லேப்-டாப் வழங்கிய பின், வழங்க இருந்தனர். சென்னையில் விழா தாமதமான காரணத்தால், மாணவ, மாணவியர் நான்கு மணி நேரமாக காத்திருந்தனர். இதனால், வெறுப்படைந்த மாணவ, மாணவியர் நிகழ்ச்சி நடக்கும் போதே, கூட்டம், கூட்டமாக வெளியே செல்வதும், திரும்பி வருவதுமாக இருந்தனர்.






      Dinamalar
      Follow us