/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆறுகள் இணைப்பு தாமதம் கடலில் கலந்து மழைநீர் வீண் : விவசாயிகள் கூட்டமைப்பு வேதனை
/
ஆறுகள் இணைப்பு தாமதம் கடலில் கலந்து மழைநீர் வீண் : விவசாயிகள் கூட்டமைப்பு வேதனை
ஆறுகள் இணைப்பு தாமதம் கடலில் கலந்து மழைநீர் வீண் : விவசாயிகள் கூட்டமைப்பு வேதனை
ஆறுகள் இணைப்பு தாமதம் கடலில் கலந்து மழைநீர் வீண் : விவசாயிகள் கூட்டமைப்பு வேதனை
ADDED : அக் 25, 2025 01:22 AM
திருப்பூர்: 'பருவமழை சமயங்களில் பெருமளவு நீர் கடலில் கலப்பதை தடுக்க, மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறினார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தின் பல இடங்களில், வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் பலத்த மழையால், பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்திருக்கிறது.
கீழ் பவானி அணை நிரம்பி, 10 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது; ஒரே ஆண்டில் இரு முறை இந்த அணை நிரம்பிவிட்டது.
மேட்டூர் அணையில் இருந்து, 35 ஆயிரம் கன அடி நீர் திறக்கவுள்ளனர். டெல்டா மாவட்டங்களிலும், மழை பெய்து வருவதால், அங்கும் சாகுபடிக்கு தண்ணீர் தேவையில்லாத நிலையே தென்படுகிறது.
உபரிநீரை, பாசனத்துக்கு திருப்பும் வகையிலான திட்டங்கள் எதுவும் இல்லாததால், வெளியேற்றப்படும் பெருமளவு உபரிநீர், வீணாக கடலில் கலக்கிறது.
அதே நேரம், திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம், மூலனுார், திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சில இடங்களில் மழைப் பொழிவு இல்லை; வறட்சி நிலவுகிறது.
ஒட்டன்சத்திரத்தில் கண்வலிக் கிழங்கு பயிருக்கு தண்ணீர் இல்லாததால், லாரியில் நீர் வாங்கி, பாய்ச்சும் நிலை உள்ளது.
மேட்டூர் - சரபங்கா உபரி நீர் நீரேற்று திட்டத்தை நிறைவேற்றுவதன் வாயிலாக, சேலம், நாமக்கல், அரியலுார், விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் இதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது; ஆட்சி மாற்றத்துக்கு பின் கைவிடப்பட்டது. காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தின் வாயிலாக, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட, 7க்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களில், 73 சிற்றாறுகளை இணைத்திருக்க முடியும்.
ஆயிரக்கணக்கான ஏரி, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்றிருக்க முடியும்; அதற்கான திட்டமும் கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு, ஆட்சி மாற்றத்துக்கு பின் கைவிடப்பட்டது. ஆறுகள் இணைப்பு திட்டத்தை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

